கடனை திருப்பி செலுத்த முடியாததால் தலைமறைவாகி பிரச்சினைக்குள் தனது மனைவியின் அக்காவை சிக்கவைக்க முயற்சித்த நபர்

தனது மகளின் திருமணத்திற்காக 1.5 லட்ச ரூபாய் கடன் வாங்கிய நபர் கடனை திரும்பி செலுத்த முடியாததால் தனது மனைவியின் அக்காவை இந்த பிரச்சினைக்குள் சிக்கவைக்க முயற்சித்துள்ளார்.

Update: 2021-06-04 00:07 GMT
ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தை உதம்பூரை சேர்ந்த பஞ்சபுன் மகன் சுஹல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது மகளின் திருமணத்திற்காக சிலரிடம் 1.5 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார். ஆனால், வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் திகைத்து வந்துள்ளார். 

இதற்கிடையில், சுஹலின் மனைவியின் அக்கா பெயர் ஷனோ. இவருக்கும் சுஹலுக்கும் இடையே பல நாட்களாக சண்டை நிலவி வந்துள்ளது.

இந்நிலையில், தனது மனைவியின் அக்காவை சிக்கலில் மாட்டிவிட வேண்டும் என எண்ணியை சுஹல் தான் வாங்கிய கடனை அடைக்காமல் தலைமறைவாகியுள்ளார். 

மேலும், சண்டை காரணமாக தனது மனைவியின் அக்கா ஷனோ தான் தன்னை கடத்தி சென்றுள்ளார் என அனைவரையும் நம்பவைக்க அவர் முயற்சித்துள்ளார். சுஹல் காணாமல் போனதால் அவரை யார் கடத்தி சென்றனர் என சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து, போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரையடுத்து விசாரணையை தொடங்கிய போலீசார் உதம்பூர்-ராசி மாவட்ட எல்லையீல் ஹடல்-ஹலி பகுதியில் உள்ள காட்டிற்குள் பதுங்க் இருந்த சுஹலை கண்டுபிடித்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், வாங்கிய கடனை செலுத்த முடியாததால் தலைமறைவானதாகவும், இதை ஒரு காரணமாக வைத்து தனது மனைவியின் அக்கா ஷனோதான் தன்னை கடத்தியதாக நம்பவைத்து அவரை இந்த பிரச்சனைக்குள் சிக்க வைக்க முயற்சித்தாகவும் சுஹல் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்