கேரளாவில் இன்று 21,429 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்

கேரள மாநிலத்தில் தற்போது 1,60,653 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2021-06-06 18:51 IST
திருவனந்தபுரம்,

கேரள சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,02,792 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அதில் 14 ஆயிரத்து 672 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தாக்குதலுக்கு 227 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 946 ஆக அதிகரித்துள்ளது. 

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 653 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 21 ஆயிரத்து 429 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 62 ஆயிரத்து 071 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்