பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு மத்திய தொழிற்பாதுகாப்பு படை பாதுகாப்பு - மத்திய அரசு முடிவு

ஐதராபாத்தில் உள்ள பாரத பயோடெக் நிறுவனத்திற்கு மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Update: 2021-06-09 07:34 GMT
ஐதராபாத்,

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயொடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்துள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் கோவாக்சின் தடுப்பூசி மிகப்பெரிய பங்காற்றுகிறது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்கும் பாரத் பயொடெக் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் உள்ள தடுப்பூசி தயாரிப்பு மையத்தில் கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்கப்பட்டு நாட்டின் பிற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கபப்டுகிறது. பாரத் பயொடெக் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட தலைமை அலுவலகமும் ஐதராபாத்தில் அமைந்துள்ளது. 

இதற்கிடையில், கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்து நாடு முழுவதும் வினியோகம் செய்வதால் பாரத் பயொடெக் நிறுவனத்தின் ஐதரபாத் தடுப்பூசி தயாரிப்பு மையம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.

இந்நிலையில், பாதுகாப்பு நலன் கருதி தெலுங்கானாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அந்நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பு மையம் ஆகியவற்றிற்கு மத்திய தொழிற்பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, ஐதராபாத்தில் உள்ள பார்த பயொடெக் நிறுவன அலுவலகம் மற்றும் தடுப்பூசி தயாரிப்பு மையத்திற்கு துப்பாக்கி ஏந்திய 64 சிஐஎஸ்எஃப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

வரும் 14-ம் தேதி முதல் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் பாரத் பயொடெக் நிறுவனம் மற்றும் கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பு மையங்களுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

மேலும் செய்திகள்