கடலோர காவல் படையில் 3 ஹெலிகாப்டர்கள் சேர்ப்பு

மீட்பு பணிகளுக்கு உதவும்வகையில் கடலோர காவல் படையில் 3 ஹெலிகாப்டர்கள் சேர்க்கப்பட்டது.

Update: 2021-06-13 03:06 GMT
புதுடெல்லி, 

இந்திய கடலோர காவல் படைக்கு 16 இலகு ரக ஹெலிகாப்டர்களை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் முதல் 3 ஹெலிகாப்டர்கள் நேற்று இந்திய கடலோர காவல் படையில் இணைக்கப்பட்டன.

ராணுவ செயலாளர் அஜய்குமார் மெய்நிகர் முறையில் இந்த ஹெலிகாப்டர்களை படையில் இணைத்து வைத்தார். நவீன ரகத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஹெலிகாப்டர்கள் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் கடலோர காவல் படைக்கு மிகுந்த உதவிகரமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களுக்குள் 16 ஹெலிகாப்டர்களும் கடலோர காவல்படையில் இணைக்கப்படும் எனவும், இவை அனைத்தும் புவனேஸ்வர், போர்பந்தர், கொச்சி, சென்னை ஆகிய தளங்களில் சேர்க்கப்படும் எனவும் ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும் செய்திகள்