ஆந்திராவில் புதிதாக 6,770 பேருக்கு கொரோனா

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,796 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.;

Update:2021-06-13 19:55 IST
அமராவதி,

ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,770 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி, “ மாநிலத்தில் புதிதாக  6,770 - பேருக்கு  நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 
18,09,844 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் 12,492 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 58 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 17,12,267 பேர் குணமடைந்துள்ளனர். 11,940 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய நிலவரப்படி 85,637 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்