கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும்: மத்திய மந்திரி பியூஸ்கோயல்

கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும், என திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் மத்திய மந்திரி பியூஸ்கோயல் கூறினார்.

Update: 2021-06-13 23:50 GMT
சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக மத்திய ெரயில்வே மந்திரி பியூஸ்கோயல் தனது குடும்பத்தினருடன் திருமலைக்கு வந்தார். அவரும், குடும்பத்தினரும் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து நேற்று காைல மூலவர் ஏழுமலையான் மற்றும் கோவிலில் உள்ள பல்வேறு சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தனர்.கோவிலில் உள்ள ெரங்கநாயக்கர் மண்டபத்தில் மத்திய ரெயில்வே மந்திரிக்கு லட்டு, தீர்த்தப்பிரசாதம், சாமி படம் ஆகியவற்றை திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி வழங்கினார். முன்னதாக மத்திய மந்திரி பியூஸ்கோயல் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலிலும் சாமி தரிசனம் செய்தார்.

கொரோனா கட்டுக்குள் கொண்டுவர..
திருமலையில் மத்திய மந்திரி பியூஸ் கோயல் கூறுகையில், கொரோனா தொற்று பரவலால் பல மாதங்களாக நாட்டு மக்கள் கடும் அவதிப்பட்டனர். பல்வேறு சிரமத்துக்கு இடையே அவர்கள் வாழ்ந்து வந்தனர். இனிமேல், பொதுமக்கள் மகிழ்ச்சியோடு வாழ மத்திய அரசு விரைவில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர தீவிர நடவடிக்கை எடுக்கும். கொரோனா தொற்று பரவல் இன்னும் முடியவில்லை. எனினும், நாட்டு மக்கள் விழிப்புடன் இருக்க ேவண்டும், என்றார்.அப்போது தேவஸ்தான அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

முன்னதாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த மத்திய மந்திரியை திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் வரவேற்றனர். சாமி தரிசனம் முடிந்ததும், அவர் ரேணிகுண்டா சென்று அங்கிருந்து விமானத்தில் டெல்லி புறப்பட்டார்.

மேலும் செய்திகள்