குஜராத் கவர்னருடன் உள்துறை மந்திரி அமித் ஷா சந்திப்பு

குஜராத் கவர்னரை உள்துறை மந்திரி அமித்ஷா சந்தித்துப் பேசினார். அகமதாபாத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.;

Update:2021-06-21 16:25 IST
அகமதாபாத்,

குஜராத்  கவர்னர் ஆச்சார்யா தேவ்விரத்தை உள்துறை மந்திரி அமித் ஷா நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது மாநில துணை முதல்வர் நிதின்பாய் படேலும் உடன் இருந்தார். இந்த சந்திப்பின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு இருக்கலாம் எனத்தெரிகிறது.

முன்னதாக, அகமதாபாத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா,  ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் தடுப்பூசி போடும் பணியை மத்திய அரசு அதிகப்படுத்த உள்ளதாக கூறினார். 

மேலும் செய்திகள்