காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

சோனியா காந்தியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.;

Update:2026-01-06 11:53 IST

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி (வயது 79). இவர் தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள கங்காராவ் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

சோனியா காந்திக்கு இருமல் பிரச்சினை உள்ளது என்றும், டெல்லியில் நிலவும் காற்று மாசு பிரச்சினை காரணமாக அவர் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், அவர் நுரையீரல் மருத்துவரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்