ஜார்க்கண்டில் ஜூலை 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு

ஜார்க்கண்டில் ஜூலை 1 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-06-23 14:35 GMT
ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலத்தில்  ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூலை 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் 24 ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. 

இந்த நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் ஒருவாரத்திற்கு அதாவது ஜூலை 1 ஆம் தேதி வரை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.  மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ள நடைமுறை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்