டுவிட்டர் நிறுவனத்தின் குறை தீர்ப்பு அதிகாரி திடீர் விலகல் எனத்தகவல்

இந்தியாவுக்கான டுவிட்டர் நிறுவனத்தின் இடைக்கால குறைதீர்ப்பு அதிகாரி திடீரென பதவி விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update: 2021-06-27 21:13 GMT

புதுடெல்லி,

இந்தியாவுக்கான டுவிட்டர் நிறுவனத்தின் இடைக்கால குறைதீர்ப்பு அதிகாரி திடீரென பதவி விலகி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  மத்திய அரசு கொண்டு வந்த புதிய ஐடி விதிகளை அடுத்து, இடைக்காலமாக குறைதீர்ப்பு அதிகாரியாக தர்மேந்திர சாதூர் என்பவரை டுவிட்டர் நிறுவனம் நியமித்தது. 

புதிதாக நியமிக்கப்பட்ட குறைதீர்ப்பு அதிகாரியான தர்மேந்திர சாதூரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள், அரசு விதிமுறைப்படி டுவிட்டர் இந்தியா இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், இடைக்கால குறைதீர்ப்பு அதிகாரியமான சாதூர் நேற்று திடீரென பதவி விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  

மத்திய அரசுடன்  தொடர்ந்து மோதல் போக்கை டுவிட்டர் நிறுவனம் கையாண்டு வரும் நிலையில், இடைக்கால குறைதீர்ப்பு அதிகாரி தனது பொறுப்பில் இருந்து விலகியுள்ளது அந்நிறுவனத்திற்கு மேலும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இது குறித்து டுவிட்டர் செய்தி தொடர்பாளர் எந்த கருத்தையும் வெளியிடவில்லை. 

மேலும் செய்திகள்