கருப்பு பூஞ்சை இறப்புக்கு இழப்பீடு: மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கருப்பு பூஞ்சை இறப்புக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-07-01 02:29 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் ரீபக் கன்சல் தாக்கல் செய்துள்ள மனுவில், கருப்பு, வெள்ளை, மஞ்சள் பூஞ்சைகளால் பாதிக்கப்படும் பெரும்பாலானவர்கள் குணமடைந்து விடுகின்றனர். கொரோனாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, நோய் எதிர்ப்புசக்தியை பலவீனப்படுத்தி, இதுபோன்ற நோய்கள் ஏற்பட வழிவகுக்கிறது. 

ஸ்டீராய்டு சிகிச்சை முறையும் இதுபோன்ற நோய்கள் ஏற்பட காரணமாகிறது. கருப்பு, வெள்ளை, மஞ்சள் நோய்களை தொற்றுநோய் சட்டத்தின்கீழ் தொற்றுநோய்களாக பல்வேறு மாநிலங்கள் அறிவித்துள்ளன. இதுபோன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் குடும்பங்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரியுள்ளார்.

இந்த மனு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், இதுதொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்