டெல்லியில் கொரோனா விதிகளை பின்பற்றாத இரண்டு சந்தைகளை மூட உத்தரவு

கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத இரண்டு சந்தைகளை மூட டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-07-04 03:23 GMT
புதுடெல்லி,

நாட்டின் தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் பரவல் கணிசமாக கட்டுக்குள் வந்துள்ளது. தொற்று பரவல் குறைந்துள்ளதால், அங்கு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.  கொரோனா விதிகளை பின்பற்றி செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், டெல்லியின் நங்கோலி பகுதியில் உள்ள பஞ்சாபி பஸ்டி மற்றும் ஜனதா மார்க்கெட் ஆகிய இரு சந்தை பகுதிகளிலும் கொரோனா தடுப்பு விதிகள் பறக்க விடப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்தும், இரு சந்தைகளையும் வரும் 6 ஆம் தேதி வரை மூட டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதற்கான உத்தரவை பஞ்சாபி பாக் பகுதியின் சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டுள்ளார்.  கொரோனா 3-வது அலை ஏற்படும் அபாயம் உள்ள நிலையில், கொரோனா தடுப்பு விதிகளை அனைத்து தரப்பினரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்