ஜம்முவின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை
ஜம்முவின் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.;
ஸ்ரீநகர்,
இந்தியாவில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆனால், கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஜம்மு நகரில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
கனமழையால் ஜம்முவில் வழக்கத்தை விட கூடுதலாக குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.