உடல்நலக்குறைவு காரணமாக மேற்கு வங்காள நிதி மந்திரி பதவியில் இருந்து விலக வாய்ப்பு...!

மேற்கு வங்காள நிதி மந்திரி அமித் மித்ரா உடல்நலக்குறைவு காரணமாக பதவியில் இருந்து விலக வாய்ப்புள்ளது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Update: 2021-07-12 06:21 GMT
கொல்கத்தா

மூத்த திரிணாமுல் தலைவர் அமித் மித்ரா உடல்நலக்குறைவு காரணமாக மேற்கு வங்காள  நிதி மந்திரி பதவியில் இருந்து விலக வாய்ப்புள்ளது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

74 வயதான மித்ரா, சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை  தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும், முதல் மந்திரி  மம்தா பானர்ஜி, நிதி மந்திரி பதவியை மித்ராவிடம் வழங்கினார்.அவர் எம்.எல்.ஏ இல்லை என்பதால், மித்ரா தனது பதவியில் அதிகபட்சம் ஆறு மாதங்கள் இருக்க முடியும்.

பெயர் வெளியிட விரும்பாத மூத்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறியதாவது:-

மம்தா பானர்ஜி மந்திரி சபையில்  அமித் மித்ரா மூன்றாவது முறையாக நிதி மந்திரியாக நியமிக்கபட்டு உள்ளார். அவர்  நவம்பர் 4 ம் தேதி  வரை  ஆறு மாதங்கள் நிறைவு செய்வார். அவர் எம்.எல்.ஏ அல்லாத மந்திரியாக இருப்பதால், ஆறு மாதங்களுக்குப் பிறகு அவர் தனது பதவியை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் அல்லது இடைத்தேர்தல்  மூலம் அவர் எம்.எல்.ஏவாக தேர்ந்து எடுக்கபட வேண்டும். இருப்பினும், உடல்நலக்குறைவு காரணமாக நவம்பர் 4 ஆம் தேதிக்கு பிறகு  மாநில மந்திரியாக  தொடர விரும்பவில்லை என்று அவர் கட்சியிடம் தெர்வித்துள்ளார் என கூறினார்.

அடுத்த நிதி  மந்திரியாக  பொறுப்பேற்க பொருத்தமான ஒருவரை தேர்ந்து எடுக்கும்  வரை பானர்ஜி நிதி இலாகாவை வைத்திருக்க வாய்ப்புள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

மேலும் செய்திகள்