கணவர் வீட்டை விட்டு வெளியேற்றியதால் மூன்று மாத குழந்தையுடன் பெண் உள்ளிருப்பு போராட்டம்

கணவர் வீட்டை விட்டு வெளியேற்றியதால் மூன்று மாத குழந்தையுடன் பெண் ஒருவர் ஒரு வாரமாக வீட்டில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்.

Update: 2021-07-14 05:44 GMT
பாலக்காடு: 

கேரளமாநிலம் பாலக்காடு தோனியைப் பூர்வீகமாகக் கொண்டவர்  மனு கிருஷ்ணன் ( வயது 31). மனுநிருஷ்ணனுக்கும் , பதனம்திட்டாவைச் சேர்ந்த சுருதி என்ற பெண்ணுக்குக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. 

கர்ப்பம் தரித்த சுருதி  தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் சுருதி தனது 3 மாத பெண் குழந்தையுடன் கணவர் வீட்டிற்கு  கடந்த வாரம் திரும்பினார். ஆனால் மனு கிருஷ்ணன் வீட்டை பூட்டி கொண்டு மனைவியை உள்ளே அனுமதிக்கவில்லை. ஜூலை 9 வரை அண்டை வீடுகளில் தங்கியிருந்தார். பின்னர் கணவர் வீட்டிற்குள் புகுந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.விவாகரத்து கோரி, கணவர் தங்களைத் துன்புறுத்தியதாக அந்தப் பெண்ணும் அவரது பெற்றோரும் குற்றம் சாட்டி உள்ளனர்.

இது குறித்து ஹேமாம்பிகா நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இன்ஸ்பெக்டர் ஏ சி விபின் தலைமையிலான  போலீசார் வந்து விசாரணை நடத்தினார்கள். பெண் மற்றும் குழந்தைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவதாகவும். தாய் மற்றும் குழந்தைக்கு தேவையான உதவி வழங்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்