காலில் விழ முயன்ற பெண்- நெகிழ்ச்சியை ஏற்படுத்திய பிரதமரின் திடீர் செய்கை!

வாரணாசிக்கு நேற்று சென்ற பிரதமர் மோடி ரூ.1,580 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.

Update: 2021-07-16 05:45 GMT
வாரணாசி

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக வாரணாசி விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் மோடியை உத்தரபிரதேச முதல் மந்திரி  யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர்.  அங்கிருந்த பெண்கள் இருவர் மோடிக்கு வணக்கம் தெரிவித்தனர். பிரதமரும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்தார்.  அப்போது, பிரதமரின் காலில் விழ ஒரு பெண் முயன்றுள்ளார். இதை பார்த்தது சுதாரித்து விலகிய மோடி,  அப்பெண்ணை நோக்கி குனிந்து பதில் மரியாதை செய்தார்.

தனது காலில் விழ முயன்ற பெண்ணுக்கு பிரதமர் மோடி பதில் மரியாதை செய்த வீடியோவை கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வான வானதி சீனிவாசன் நெகிழ்ச்சியுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதி எம்.பி.யாக உள்ளார்.  வாரணாசிக்கு நேற்று சென்ற பிரதமர் மோடி ரூ.1,580 கோடி மதிப்பிலான திட்டங்களை  தொடங்கி வைத்தார்.  பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் 100 படுக்கைகள் கொண்ட தாய் மற்றும் சேய் மருத்துவப் பிரிவு, பல அடுக்கு கொண்ட வாகன நிறுத்தம், வாரணாசி- காசிபூர் நெடுஞ்சாலையில் மூன்று வழி மேம்பாலங்கள், கங்கை ஆற்றில் சுற்றுலா வளர்ச்சிக்காக கப்பல் போக்குவரத்து ஆகிய திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.

மேலும் செய்திகள்