மும்பையில் பலத்த மழையால் சாலைகளில் வெள்ள பெருக்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பலத்த மழையால் சாலைகளில் வெள்ள பெருக்கு பஸ் -ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-07-16 10:22 GMT
Image courtesy : TOI Photo
மும்பையில்

மும்பையின் தானே, சயனி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் மிக கனமான மழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழக்கை பெரும் அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. பல பகுதிகள் போக்குவரத்தில் இருந்து துண்டிக்கப்பட்டு உள்ளன.மும்பை ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

 புறநகர்ப் பகுதிகளில் அதிகாலை முதல் பலத்த மழை பெய்தது, மும்பை தீவு நகரத்தில் 55.3 மிமீ மழையும், கிழக்கு மற்றும் மேற்கு புறநகர்ப்பகுதிகளில் முறையே அதிகாலை 4 மணி முதல் காலை 9 மணி வரை 135 மிமீ மற்றும் 140.5 மிமீ மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

புனே, ரத்னகிரி, கோல்காபூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது. 

நகரத்திலும் அதன் புறநகர்ப்பகுதிகளிலும் செய்த பலத்த மழையால் மிதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மும்பையின் குர்லாவில் சேரி பகுதியில் இன்று காலை  சுமார் 250 வீட்டில் உள்ளவர்கள் வெளியேற்றபட்டனர்.   உள்ளூர் ரெயில் சேவைகளையும் பாதித்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

2009 ம் ஆண்டுக்கு பிறகு ஜூலை மாதத்தில் மும்பையில் மூன்றாவது முறையாக அதிக மழை பதிவாகி உள்ளது.  ஜூலை 15, 2009 அன்று,
மும்பையில் 274.1 மிமீ மழை பெய்தது. 2019 ஜூலை 2 ஆம் தேதி 376.2 மிமீ மழை பதிவாகி இருந்தது என வானிலை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 

நேற்று மும்பை, தானேயில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்த, வானிலை ஆய்வு மையம் புனே, ராய்காட், ரத்னகிரி, கோலாப்பூர், சத்தாரா ஆகிய மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுத்திருந்தது. இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், 'முப்பை நகரிலும் புறநகர்ப் பகுதிகளிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்