பக்ரீத் கொண்டாட்டத்தில் 50 பேருக்கு மேல் கூட தடை: உத்தரபிரதேச அரசு அறிவிப்பு

குர்பானிக்காக மாடுகள் அல்லது ஒட்டகங்களை பலியிடக்கூடாது என்று உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது;

Update:2021-07-20 08:38 IST
கோப்புப்படம்
லக்னோ, 

பக்ரீத் பண்டியை முன்னிட்டு கேரளாவில் 19ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்படுவதாக கேரள மாநில அரசு அறிவித்தது.. ஆனால், கேரள அரசு இந்த முடிவுக்கு இந்திய மருத்துவர் சங்கம் கண்டனம் தெரிவித்தது.. இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. அந்த மனு தொடர்பாக பதிலளிக்க கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டும் உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் பக்ரீத் கொண்டாட்டங்களின்போது பொது இடங்களில் 50 பேருக்கு மேல் கூட்டமாக இருக்க கூடாது என்று அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மேலும் குர்பானிக்காக மாடுகள் அல்லது ஒட்டகங்களை பலியிடக்கூடாது என்றும், பொது இடங்களில் குர்பானி நிகழ்வுகள் நடத்தப்படக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்