ஐபேக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை: எங்களால் பாஜக அலுவலகங்களில் சோதனை நடத்த முடியும் - மம்தா பானர்ஜி ஆவேசம்

எங்கள் கட்சியின் முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை மூலம் அமித்ஷா முயற்சிப்பதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார்.;

Update:2026-01-08 17:22 IST

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அம்மாநிலத்தின் முதல்-மந்திரியாக மம்தா பானர்ஜி இருந்து வருகிறார். அம்மாநிலத்தை ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு கட்சிகளும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றன. தேர்தல் கமிஷன் நடத்திய எஸ்ஐஆர் பணிகள் முதல் பல்வேறு விஷயங்களில் பாஜகவை மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்தநிலையில், மேற்கு வங்காளத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு பிரசாந்த் கிஷோர் தோற்றுவித்த ஐபேக் என்ற நிறுவனம் தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறது. தேர்தல் வியூக பணியில் இருந்து பிரசாந்த் கிஷோர் விலகிவிட்டதால், இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக தற்போது ரிஷி ராஜ் சிங், பிரதிக் ஜெயின், வினேஷ் சந்தேல் ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில், இந்த நிறுவனத்தின் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று திடீரென வந்து சோதனை நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மம்தா பானர்ஜி சோதனை நடக்கும் இடத்துக்கு வந்து ஆய்வு செய்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

எங்களின் வேட்பாளர் பட்டியல் மற்றும் கட்சியின் தொடர்புடைய ஹார்டு டிஸ்க்களை சேகரிப்பதா அமலாக்கத்துறை மற்றும் அமித்ஷாவின் வேலை. நாட்டை பாதுகாக்க முடியாத உள்துறை மந்திரியால் எனது கட்சியின் ஆவணங்களை எடுத்துச் செல்கிறார்.

கட்சி தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகளை எடுத்துச் செல்ல முயற்சி நடக்கிறது. அதில் சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியல் இருக்கிறது. அவற்றை எடுத்து வந்துவிட்டேன். எங்களால் பாஜக அலுவலகங்களில் சோதனை நடத்த முடியும். ஒரு புறம், எஸ்ஐஆர் பணி என்ற பெயரில், மேற்கு வங்காளத்தில் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். தேர்தல் காரணமாக, எனது கட்சி குறித்த தகவல்களை சேகரிக்க முயற்சிக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்