தெலுங்கானாவில் சாலை விபத்து; 4 பேர் பலி

சுங்கரி நட்சத்திரா என்பவர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.;

Update:2026-01-08 16:11 IST

ஐதராபாத்,

தெலுங்கானாவின் மிர்சாகுடா கேட் பகுதியில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் 4 சக்கர வாகனம் ஒன்று விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர்.

அவர்கள் கர்கயாலா சுமித், நிகில், பால்முரி ரோகித் மற்றும் தேவலா சூர்ய தேஜா என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

விபத்தில், சுங்கரி நட்சத்திரா என்பவர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்துக்கான காரணம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்