கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று கவர்னர் மாளிகையை முற்றுகையிட திட்டம்

உளவு பார்த்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று கவர்னர் மாளிகையை முற்றுகையிட திட்டமிட்டுள்ளனர்.

Update: 2021-07-22 02:23 GMT
பெங்களூரு,

இஸ்ரேல் தனியார் நிறுவனம் ஒன்று நவீன தொழில்நுட்பம் மூலம் இந்திய அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், அதிகாரிகள், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளை உளவு பார்த்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. 

இந்த நிலையில் மத்திய அரசை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று (வியாழக்கிழமை) கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், பெங்களூரு விதான சவுதாவில் ஒன்று கூடி அங்கிருந்து ஊர்வலமாக கவர்னர் மாளிகையை நோக்கி செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்த போராட்டம் காலை 10 மணிக்கு நடைபெற்ற உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்