வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரங்களை இணைக்க மத்திய அரசு முயற்சி: அமித்ஷா

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மேகாலயாவில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

Update: 2021-07-24 21:43 GMT
நேற்று அவர் அந்த மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங் போய்ச்சேர்ந்தார். அங்கு அவர் மாநிலங்களுக்கு இடையேயான பஸ் முனையத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “வடகிழக்கு மாநிலங்கள் நாட்டின் ஒரு பிராந்தியம். அவை ஒன்று மற்றொன்றுடன் இணைக்கப்படுவது மிக முக்கியம். அதைச் செய்யாமல் இந்த பிராந்தியம் முன்னேறுவது கடினம். அனைத்து வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரங்களையும் ஒன்றோடொன்றை இணைப்பதற்கு மத்திய அரசு முயற்சித்து வருகிறது” என குறிப்பிட்டார்.

மேலும் வடகிழக்கு மாநிலங்களில் போதுமான தொடர்பு இல்லாதபோது அவற்றின் பாதுகாப்பை வலுப்படுத்த முடியாது என்றும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்