கைத்தறி ஆடைகளை வாங்கி அணிய வேண்டும் - பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

ஊரகப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி ஆடைகளை வாங்கி அணிய வேண்டும் என்று பிரதமர் மோடி பேசினார்.

Update: 2021-07-25 06:13 GMT
புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

* டோக்கியோ ஒலிம்பிக்கில் மூவர்ணக் கொடியை  ஏந்தி இந்திய வீரர்கள் வலம் வந்தது பரவசத்தை ஏற்படுத்தியது. 
* ஊரகப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி ஆடைகளை வாங்கி அணிய வேண்டும்.

*வெள்ளையனே வெளியேறு என போராட்டம் நடந்ததை போல் இந்தியாவை ஒருங்கிணைப்போம் என செயல்படுவோம்.

*லைட் ஹவுஸ் என்னும் தொழில்நுட்பம் மூலம் குறைந்த செலவில் மிக விரைவாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

*தமிழகத்தில், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ராதிகா சாஸ்திரி என்பவர், மலைப்பகுதிகளில், நோயாளிகளை சிகிச்சைக்கு அழைத்து செல்ல, எளிதாக வாகன வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆட்டோ ஆம்புலன்ஸ் திட்டத்தை ஆரம்பித்தார். 

*இதற்காக, அவர் நடத்தும் உணவகத்தில் பணியாற்றுபவர்களிடம் பணம் சேகரித்தார். இன்று 6 ஆட்டோ ஆம்புலன்ஸ்கள் செயல்படுகின்றன.
 
*நாளை கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட உள்ளது. நமது வீரர்களின் தைரியம் மற்றும் ஒழுக்கத்தை கார்கில் போர் எடுத்து காட்டுகிறது. இதனை முழு உலகமும் பார்த்தது" இவ்வாறு அவர் பேசினார்.



மேலும் செய்திகள்