பாஜக வடகிழக்கு பகுதியில் தனது பலத்தை அதிகரித்து வருகிறது - அமித்ஷா

பாஜக வடகிழக்கு பகுதியில் தனது பலத்தை அதிகரித்து வருகிறது - அமித்ஷா

Update: 2021-07-25 15:55 GMT
கவுகாத்தி,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அரசு முறைப்பயணமாக அசாம் மாநிலத்திற்கு சென்றுள்ளார். தொடர்ந்து உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கான திட்டங்களை துவக்கி வைத்தார். பின்னர் கவுகாத்தி நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது: 

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து வடகிழக்கு பகுதியை சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. தற்போது மோடி அமைச்சரவையில் ஒரே நேரத்தில் 5 பேர்களுக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் வடகிழக்கு பகுதியும் இடம் பெற வேண்டும் என்பதே நமது விருப்பமாகும். பாஜக வடகிழக்கு பகுதியில் தனது பலத்தை அதிகரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அசாம் மாநிலத்தில் பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. 

5 ஆண்டுகளாக, சர்பானந்தா சோனோவால் மற்றும் ஹிமந்தா பிஸ்வா சர்மா இருவரும் அரசை நடத்தி வந்த விதத்தில், அசாம் மக்கள் வளர்ச்சியின் பாதையை விரும்புகிறார்கள், அதனால்தான் எச்.பி. சர்மா புதிய முதல்-மந்திரி ஆகி உள்ளார். சர்மாவின் இரண்டாவது இன்னிங்ஸுக்கு அசாம் அணியை நான் வாழ்த்துகிறேன்.

மாநிலத்தில் தீவிரவாதத்தை நிரந்தரமாக அகற்றி விட்டு வளர்ச்சியை உருவாக்க வேண்டிய காலம் இது.

இவ்வாறு அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்