எடியூரப்பா ராஜினாமா: கர்நாடகத்திற்கு அடுத்த முதல்-மந்திரி யார்?

கர்நாடக முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா நேற்று ராஜினாமா செய்தார்.

Update: 2021-07-26 22:26 GMT
பெங்களூரு,

கர்நாடக முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா நேற்று ராஜினாமா செய்தார். அரசின் 2 ஆண்டுகள் சாதனை விழா மேடையிலேயே கண்ணீர் சிந்தியபடி இதனை அவர் அறிவித்தார். பின்னர் எடியூரப்பா, கவர்னர் கெலாட்டை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

இந்நிலையில், கர்நாடகத்திற்கு அடுத்த முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் மத்திய நாடாளுமன்ற விவகாரம், நிலக்கரி, கனிமவளத்துறை மந்திரி பிரகலாத்ஜோஷி, மாநில கனிம வளத்துறை மந்திரி முருகேஷ் நிரானி, பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ், அரவிந்த் பெல்லத் எம்.எல்.ஏ. ஆகியோரின் பெயர்கள் பலமாக அடிபடுகின்றன. 

இதில் பிரகலாத்ஜோஷி, பி.எல்.சந்தோஷ் ஆகிய இருவரும் பிராமணர் வகுப்பை சேர்ந்தவர்கள். முருகேஷ் நிரானி, அரவிந்த் பெல்லத் ஆகிய 2 பேரும் பெரும்பான்மை சமூகமாக உள்ள லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர்கள். எடியூரப்பாவும் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அதே சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்கினால் தான் அந்த மக்களின் ஆதரவை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று பா.ஜனதா மேலிடம் கணக்கு போடுகிறது.

மேலும் செய்திகள்