பிச்சை எடுப்பதை தடை செய்ய உத்தரவிட முடியாது என சுப்ரீம் கோர்ட் மறுப்பு

யாரும் விருப்பப்பட்டு பிச்சை எடுப்பதில்லை. எனவே, பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

Update: 2021-07-27 06:23 GMT
புதுடெல்லி,

கொரோனா பெருந்தொற்று சூழலில் தெருக்களிலும், சாலைகளில் பிச்சை எடுப்பதற்கு  தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், பிச்சை எடுப்பதை தடை செய்ய உத்தரவிட மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், 

 “வறுமையின் காரணமாக பிச்சை எடுப்பதை உயர் வர்க்க கண்ணோட்டத்தில் இருந்து பார்க்க விரும்பவில்லை. யாரும் விருப்பப்பட்டு பிச்சை எடுப்பதில்லை. எனவே, பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது. தடை செய்வதை விட பிச்சைக்காரர்களுக்கு மறு வாழ்வு வழங்குவதுதான் தற்போதைய மிக முக்கிய தேவை. சிக்னல்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்கு மறுவாழ்வு வழங்கி உயர்கல்வி தர முன் வர வேண்டும்”என்றார்.

மேலும் செய்திகள்