கேரள மாநிலத்தில் பிளஸ் 2 தேர்வில் 87.94 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி

கேரள மாநிலத்தில் பிளஸ் டூ தேர்வில் 3,28,702 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக மாநில கல்வி மந்திரி அறிவித்துள்ளார்.

Update: 2021-07-28 11:42 GMT

திருவனந்தபுரம்

கேரளத்தில் பிளஸ் 2 மாணவர்களில் 87.94 சதவீதம்  பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட கேரளத்தில் பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி விகிதம் 2.81 சதவீதம் அதிகரித்துள்ளதாக கல்வி மந்திரி  சிவன் குட்டி தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது:-

கடந்த ஆண்டு 18,510 மாணவர்கள் முழு ஏ பிளஸ் பெற்றிருந்தாலும்,   இந்த முறை 48,383 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் ஏ பிளஸ் பெற்றுள்ளனர்.

அறிவியல் பாடத்தில்  90.52 சதவீத மாணவர்களும் கலை, 89.33 சதவீதம் , வர்த்தகம் மற்றும் மனிதநேயம், 80.04 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

அரசு உதவி பெற்ற பள்ளிகள் 90.37 சதவீத  தேர்ச்சிபெற்று உள்ளனர். அரசு பள்ளிகளில் 85.02 சதவீத மாணவர்களும், அரசு உதவி பெறாத பள்ளிகளில் 87.67 சதவீத  மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

136 பள்ளிகள் மாநிலத்தில் 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்துள்ளன. அவற்றில் 11 அரசுப் பள்ளிகள், 72 அரசு உதவி பெறாதவை, 36 உதவி பெறும் பள்ளிகள் மற்றும் ஒன்பது சிறப்புப் பள்ளிகள்.வி.எச்.எஸ்.இ.யில் தேர்ச்சி சதவீதம் 80.36 சதவீதம்  ஆகும் என கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்