மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் மம்தா பானர்ஜி

மோடிக்கு எதிராக டெல்லியில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார்.

Update: 2021-07-29 06:28 GMT
புதுடெல்லி

டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர்கள் சோனியா காந்தி, கெஜ்ரிவால் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசிய மம்தா பானர்ஜி , 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியுடன் கேலா ஹோபே நிகழும் என கூறினார் கேலா ஹோபே என்பது வங்காளத்தில் போட்டியில்  ஒரு கை பார்ப்போம் என்று கூறுவதாகும்.

டெல்லியில் எதிர்க்கட்சிகளை மோடிக்கு எதிராக ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில் லாலு பிரசாத் யாதவுடன் தொலைபேசியில் பேசியதாகக் கூறினார்.

2024 ஆம் ஆண்டு தேர்தல் நிலைமை எப்படியிருக்கும் என்று ஆருடம் கூற தான் ஜோசியக்காரர் இல்லை என்று கூறிய மம்தா , அரசியல் கட்சிகளைப் பொறுத்து தான் மாற்றம் நிகழும் என்றார். தமது முடிவை மற்ற கட்சிகள் மீது திணிக்க முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

நேற்று பிற்பகல், மம்தா பானர்ஜி பத்திரிகையாளர்களுடன் சாய் பெ சர்ச்சா (தேநீர்  கலந்துரையாடல்) நடத்தினார்,

ஒரு மாநில முதல் மந்திரி டெல்லிக்கு வந்து ஊடகங்களில்  பதிவு செய்யாத சந்திப்பைப் பார்ப்பது சுவாரஸ்யமானது. மம்தா பானர்ஜியின் முகத்தில் வெற்றி மற்றும் தன்னம்பிக்கை பிரகாசித்தது. பிரதமர் மோடியை தோற்கடிக்க அவர் மந்திரத்தைக் கண்டுபிடித்தது போல. 

மோடி மற்றும் அமித் ஷா ஆகியோருக்கு அஞ்சத் தேவையில்லை என்று அவர் அடிக்கடி  வலியுறுத்தினார். அவர் பலமுறை ஒரு செய்தியை கூறினார். மோடியைப் தோற்கடிப்பதற்கான  மந்திரம் எங்களிடம் உள்ளது, வங்காளத்தில் அவர்களுக்கு இந்தப் பாடத்தை நாங்கள் கற்றுக் கொடுத்தோம்.

ஒரு நிருபரின்  மேற்கு வங்காளத்திலிருந்து வந்ததால், நீங்கள் எதிர்க்கட்சியை ஒன்றிணைக்க முடியும் என்று நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு

'மோடியும் அமித் ஷாவும் குஜராத்தில் இருந்து வந்து டெல்லியில் ஆட்சி செய்ய முடிந்தால், ஏன் ஏன் வர  முடியாது? நான் என்ன வெளிநாட்டவரா? அவர்கள் மேற்கு வங்காளத்தில் வெளியாட்கள். நான் வங்காளத்தைச் சேர்ந்தவர். ஆனால் யாராவது குஜராத்தில் இருந்து வந்து டெல்லியில் ஆட்சி செய்ய முடிந்தால், நான் ஏன் மேற்கு வங்காளத்திலிருந்து வந்து எதிர்க்கட்சியை ஒன்றிணைக்க முடியாது? என கேட்டார்.

அனைத்து எதிர்க்கட்சிகளும் பிரச்சினைகளை எழுப்புகின்றன, ஆனால் ஸ்னூப் கேட் மிகப்பெரிய பிரச்சினையாகும். உத்தரபிரதேச தேர்தலில் பிரச்சாரத்திற்கு எதிர்க்கட்சிகள் அழைத்தால் தான் தயாராக இருப்பதாகவும் மம்தா சுட்டிக்காட்டினார்.

நான் ஒரு அரசியல் ஜோதிடர் அல்ல, அது நிலைமையைப் பொறுத்தது. சோனியா காந்தி, கெஜ்ரிவால், லாலு பிரசாத் உள்ளிட்ட தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் இதில் தன்னை முன்னிலைப்படுத்தவில்லை. நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்குப் பிறகு, எதிர்க்கட்சிகள் சந்திக்க வேண்டும்.

பா.ஜ.க.வைத் தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைவது அவசியம் ... தனியாக, நான் ஒன்றுமில்லை - அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியிருக்கும். நான் ஒரு தலைவர் அல்ல, நான் ஒரு கேடர். நான் தெருவில் இருந்து வந்த ஒரு நபர் என அவர் கூறினார்.

நான்  சோனியா காந்தி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை சந்தித்தேன். நான்  லாலு பிரசாத் யாதவுடன் பேசினேன்.  பாராளுமன்றத்தின் பருவமழைக் கூட்டத்தொடர் முடிந்ததும் இதுகுறித்த  விவாதங்கள் நடக்கும். 

எனக்கு நவீன் பட்நாயக், ஜெகன் மோகன் ரெட்டி, மு.க.ஸ்டாலின் (திமுக) போன்றவர்களுடன் நல்ல உறவு உள்ளது

பீகார் முதல் மந்திரி நிதீஷ்குமாரைப் பற்றி கேட்டபோது, அவர் அவர் இப்போது பாஜகவுடன் இருக்கிறார். அவர் பாஜகவை விட்டு வெளியேறினால், பார்ப்போம் என கூறினார்.

ஒவ்வொரு பிராந்திய கட்சியும் வலுவானது. பிராந்திய கட்சிகள் ஒன்றாக இருந்தால், அவை ஒரு சக்தியாக இருக்கும்… ஒரு கட்சி முறையை விட வலிமையானவை. நேர்மை இருந்தால் ஒற்றுமை இருக்கும்.

சோனியா காந்தி எதிர்க்கட்சி ஒற்றுமையில் "ஆர்வமாக" உள்ளார்.  நான் எப்போதும் சோனியாஜியுடன் அன்பான உறவை வைத்திருந்தேன், ராஜீவ்ஜியின் காலத்திலிருந்து, நான் அதை பராமரிக்கிறேன்," என்று பானர்ஜி கூறினார்.

வியாழக்கிழமை, இன்று மம்தா பானர்ஜி  மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி மற்றும் தி.மு.க. எம்பி. கனிமொழி ஆகியோரை சந்திக்கிறார்.

மேலும் செய்திகள்