காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தகவல்

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நேற்று தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.;

Update:2021-07-30 18:23 IST
புதுடெல்லி,

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் நேற்றும் இன்றும் பாராளுமன்ற அவை நடவடிக்கையில் ராகுல் காந்தி கலந்து கொள்ளவில்லை எனக்கூறப்படுகிறது. 

இந்தத் தகவல்களை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. எனினும், ராகுல் காந்தி எந்த நிறுவனத்தின் தடுப்பூசியை போட்டுக்கொண்டார் என்ற விவரம் வெளியாகவில்லை. 

மேலும் செய்திகள்