அசாம்- மிசோரம் இடையே மீண்டும் போக்குவரத்து

எல்லையில் வன்முறை காரணமாக முடங்கி இருந்த அசாம் - மிசோரம் இடையே மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

Update: 2021-07-30 22:17 GMT
கவுகாத்தி,

வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம் இடையே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண 1995- முதல், இரு மாநிலங்களுக்கு இடையே பல கட்ட பேச்சு நடந்தும் உடன்பாடு ஏற்படவில்லை. சமீப காலமாக இரு மாநிலங்களுக்கு இடையிலான எல்லை மோதல் தீவிரமானது. சமீபத்தில் இரு மாநில எல்லையில் வன்முறை வெடித்தது. இந்த மோதலில் அசாம் போலீசார் 6 பேர் பலியாயினர். இதனால் அசாம் - மிசோரம் எல்லையில் கடும் பதற்றம் ஏற்பட்டது.

அசாமை சேர்ந்த பல்வேறு அமைப்புகள், அசாம் வழியாக மிசோரமுக்கு செல்லும் வாகனங்களுக்கு தடை விதித்தன. இதற்கு மிசோரம் கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில் அதிகாரிகள் கூறியதாவது:

எல்லையில் பதற்றம் நீடிக்கிறது; எனினும் அசாமிலிருந்து மிசோரமுக்கு முடங்கியிருந்த போக்குவரத்து துவங்கியுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்