இந்தியா-வங்காளதேசம் இடையே 56 ஆண்டுகளாக மூடப்பட்ட வழித்தடத்தில் சரக்கு ரெயில் போக்குவரத்து தொடங்கியது

இந்தியா-வங்காளதேசம் இடையே உள்ள 5 ரெயில் வழித்தடங்களில் ஹல்டிபாரி-சிலாஹடி வழித்தடமும் ஒன்றாகும். இது, கொல்கத்தா-சிலிகுரி இடையிலான அகல பாதையின் ஒரு அங்கமாக உள்ளது. பிரிவினைக்கு பிறகும் நீடித்த ரெயில் போக்குவரத்து, கடந்த 1965-ம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரைத் தொடர்ந்து நிறுத்தப்பட்டது.

Update: 2021-08-02 01:20 GMT
கடந்த ஆண்டு டிசம்பர் 17-ந் தேதி, இந்த வழித்தடத்தை பிரதமர் மோடியும், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் காணொலி காட்சி மூலம் மீண்டும் திறந்து வைத்தனர். இருப்பினும், கொரோனா பரவல் காரணமாக, ரெயில் போக்குவரத்து தொடங்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், 56 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக அப்பாதையில் ஒரு சரக்கு ரெயில் சென்றது. நேற்று முன்தினம் மேற்கு வங்காளத்தின் டம்டிம் ரெயில் நிலையத்தில் இருந்து 40 வேகன்களில் 2 ஆயிரத்து 500 டன் கற்களை ஏற்றிக்கொண்டு சரக்கு ரெயில் புறப்பட்டது. நேற்று பகல் 1.30 மணியளவில், வங்காளதேசத்தின் சிலஹடி ரெயில் நிலையத்தை அடைந்தது. அதை 
வங்காளதேச அரசு அதிகாரிகளும், இந்திய தூதரக அதிகாரிகளும் வரவேற்றனர்.

மேலும் செய்திகள்