ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் இயல்பை விட அதிக மழை பெய்யும்- இந்திய வானிலை ஆய்வு மையம்

ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் இயல்பை விட அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-08-02 17:25 GMT
புதுடெல்லி, 

நாட்டின் பல பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. 4 மாத மழைக்காலத்தின் 2-வது பாதியான ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் இந்த பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்யும் என இந்திய வானிலை ஆய்வுத்துறை தெரிவித்து உள்ளது.

இதைப்போல வானிலை ஆய்வுத்துறை இயக்குனர் மிருதுஞ்சய் மொகாபத்ரா வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில், ஆகஸ்டு மாதத்தில் இயல்பான மழை அளவு இருக்கும் எனக்கூறியுள்ளார். 

அதேநேரம் நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் இயல்பான அளவு முதல் குறைவான அளவு வரையிலான மழை இருக்கும் எனவும் மொகாபத்ரா தெரிவித்துள்ளார். ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் இயல்பை விட அதிக மழை பெய்யும் என்று  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்