நாடாளுமன்றத்தை அவமதிக்கும் எதிர்க்கட்சிகள் ; பிரதமர் மோடி குற்றச்சாட்டு

இன்று எதிர்க்கட்சிகளை சமாளிப்பது குறித்த பா.ஜ.க. எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-08-03 06:16 GMT
புதுடெல்லி

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 19-ந் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் சபை நடவடிக்கைகளை நடத்த விடாமல் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. விவசாயிகள் பிரச்சனை, டெலிபோன் ஒட்டுகேட்பு, விலைவாசி உயர்வு போன்றவற்றை எழுப்பி சபையை நடத்த விடாமல் செய்து வருகின்றனர். இதனால் ஒவ்வொரு நாளும் சபை முடங்கி வருகிறது. இந்த அமளிக்கு மத்தியிலும் முக்கிய மசோதாக்கள் மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன.

இன்று எதிர்க்கட்சிகளை சமாளிப்பது குறித்த பா.ஜ.க. எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் பலர் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி  பேசும் போது  தினமும் முழக்கங்களை எழுப்பி நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் எதிர்க்கட்சிகள் தடுக்கின்றன எனகுற்றச்சாட்டினார். நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் அவமதிப்பதாக மோடி கூறினார். 

மேலும் செய்திகள்