எடியூரப்பா நியமித்த முதல்-மந்திரியின் செயலாளர்கள்-ஆலோசகர்கள் நீக்கம் - கர்நாடக அரசு உத்தரவு

எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்த போது நியமித்த செயலாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் அனைவரும் நீக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-08-03 19:26 GMT
பெங்களூரு,

கர்நாடக முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அந்த மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை பதவியேற்றார். இந்த நிலையில் எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்த போது அவரின் அரசியல் செயலாளர்களாக பணியாற்றிய ரேணுகாச்சார்யா, ஜீவராஜ், சந்தோஷ் ஆகியோர் அந்த பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் எடியூரப்பா நியமித்த கல்வித்துறை சீர்திருத்த ஆலோசகர் துரைசாமி, சட்ட ஆலோசகர் மோகன் லிம்பிகாயி, ஊடக ஆலோசகர் புருங்கேஷ், மின் ஆளுமை ஆலோசகர் பேலூர் சுதர்சன், முதல்-மந்திரியின் ஊடக ஒருங்கிணைப்பாளர் சுனில் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்த போது நியமித்த செயலாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் அனைவரும் நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்