நீரஜ் சோப்ராவுக்கு அரியானா-ரூ.6 கோடி, பஞ்சாப்-ரூ.2 கோடி, பி.சி.சி.ஐ.-ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு அரியானா அரசு ரூ.6 கோடி பரிசும், கிரேட் 1 அரசு வேலையும் அறிவித்து உள்ளது.

Update: 2021-08-07 17:31 GMT



புதுடெல்லி,

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் இறுதி போட்டி இன்று நடந்தது.  இதில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியில் 87.03 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து முதல் இடம் பிடித்து அசத்தினார்.

தொடர்ந்து 2வது முயற்சியில் அவர் 87.58 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து மீண்டும் அசத்தினார்.  தொடர்ந்து டாப் 3ல் முதல் இடமும், டாப் 8ல் முதல் இடமும் பிடித்து பதக்கம் பெறும் வாய்ப்பினை உறுதி செய்த நீரஜ் சோப்ரா, இறுதி சுற்று வரை முதல் இடத்தில் நீடித்து, வெற்றி பெற்று, தங்க பதக்கம் தட்டி சென்றார்.

அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.  அவரது சொந்த ஊரிலும் மக்கள் ஆரவாரமுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு அரியானா அரசு ரூ.6 கோடி பரிசும், கிரேட் 1 அரசு வேலையும் அறிவித்து உள்ளது.  முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் இதனை அறிவித்து உள்ளார்.

இதேபோன்று, பஞ்சாப் அரசு ரூ.2 கோடி மற்றும் பி.சி.சி.ஐ. ரூ.1 கோடி பரிசு தொகை அறிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்