கர்நாடகத்தில் திறமைக்கு ஏற்ப மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு- ஈசுவரப்பா கருத்து

கர்நாடகத்தில் திறமைக்கு ஏற்ப மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மந்திரி ஈசுவரப்பா தெரிவித்துள்ளார்.

Update: 2021-08-07 18:45 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் பசவராஜ் பொம்மை தலைமையிலான மந்திரி சபை கடந்த 4-ந்தேதி விரிவாக்கம் செய்யப்பட்டது. 29 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். நேற்று அவர்களுக்கு இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிவமொக்காவில் மந்திரி ஈசுவரப்பா நிருபர்களிடம் கூறுகையில், எம்.எல்.ஏ.க்களின் தகுதி, திறமைக்கு ஏற்ப இலாகாக்களை முதல்-மந்திரி ஒதுக்கீடு செய்துள்ளார். 

இதனால் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு ஊரக வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு ஒதுக்கிய துறைகளில் மந்திரிகள் சிறப்பாக செயல்பட வேண்டும். சிவமொக்கா மாவட்டத்தில் இருந்து நானும், அரகா ஞானேந்திராவும் மந்திரியாக தேர்வாகி உள்ளோம். இதில் எனக்கு ஊரக வளர்ச்சித் துறையும், அரகா ஞானேந்திராவுக்கு உள்துறையும் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதனால் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றார்.

மேலும் செய்திகள்