டெல்டா பிளஸ் வைரசால் மராட்டிய மாநிலத்தில் 3 வது நபர் உயிரிழப்பு
மராட்டிய மாநிலத்தில் டெல்டா பிளஸ் வைரசால் மேலும் 4 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.ஆனால் அனைவரும் சிகிச்சையின் பின்னர் நன்றாக குணமடைந்துள்ளனர்.;
மும்பை
மராட்டிய மாநிலத்தில் கொரோனாவின் மாறுபட்ட டெல்டா பிளஸ் வைரசால் 3- வதாக ஒருவர் இறந்து உள்ளார். இந்த மரணம் ராய்காட் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது;-
டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்ட மூன்றாவது நபர் முதியவர் 69 வயது . மேலும், இறந்தவருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.அந்த நபர் ஜூலை 22 அன்று காலமானார் என கூறி உள்ளனர்.
மராட்டிய மாநிலத்தில் டெல்டா பிளஸ் வைரசால் மேலும் 4 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.ஆனால் அனைவரும் சிகிச்சையின் பின்னர் நன்றாக குணமடைந்துள்ளனர்.
டெல்டா பிளஸ் மாறுபட்ட வைரசால் முதல் இறப்பு ஜூன் 13 அன்று ரத்னகிரி மாவட்டத்தில் பதிவானது அங்கு 80 வயது பெண்மணி மரணமடைந்தார். அந்த பெண் கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் கூட போட்டுக்கொள்ளவில்லை.
இரண்டாவது மரணம் மும்பையில் நடந்து உள்ளது. நுரையீரல் தொற்றுடன் 63 வயதான பெண்மணி ஜூலை 27 அன்று காலமானார். அவருக்கும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.