டெல்லி மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் புதிய மெட்ரோ வழித்தடத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.;

Update:2025-12-24 21:18 IST

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், டெல்லி மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி சுமார் 16 கிலோ மீட்டர் துரத்திற்கு டெல்லி மெட்ரோவில் புதிய வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளன. மொத்தமாக 13 ரெயில் நிலையங்களும் அமைய உள்ளன.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இந்த புதிய வழித்தடத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் காற்று மாசு பிரச்சினை தீவிரமாகி வரும் சூழலில், மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, மோட்டார் வாகனங்களால் ஏற்படும் மாசுபாட்டை குறைக்க முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

Full View
Tags:    

மேலும் செய்திகள்