அரசும், எதிர்க்கட்சிகளும் எனது இரு கண்கள்: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் ஏற்பட்ட அமளியின்போது வெளியாட்களை கொண்டுவந்து எம்.பி.க்கள் தாக்கப்பட்டதாகவும், மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பாரபட்சமாக நடந்து கொண்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

Update: 2021-08-13 19:25 GMT
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு, ‘எனக்கு அரசும், எதிர்க்கட்சிகளும் இரண்டு கண்கள் போன்றவை. இரண்டையும் சமமாகத்தான் கருதுகிறேன். இரண்டு கண்களால்தான் சரியாகப் பார்க்க முடியும். எனவே நான் இரு தரப்புக்கும் சம மரியாதை அளிக்கிறேன். அவை சுமூகமாக நடைபெற உதவுவது, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் ஆகிய இரண்டு தரப்பின் பொறுப்பு. அவை உறுப்பினர்கள் விவாதம், கலந்துரையாடல்களில் ஈடுபடலாம். மாறாக வெளியில் உள்ள அரசியல் சண்டைகளை அவை மேஜைக்கு கொண்டுவரக் கூடாது.’

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்