முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினம்- நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.;
புதுடெல்லி,
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான “சதைவ் அடல்” மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். உள்துறை மந்திரி அமித் ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் பிற பாஜக தலைவர்களும் மரியாதை செலுத்தினர்.