கேரளாவில் விடுமுறை நாட்களில் கொரோனா தடுப்பூசி செலுத்த முதல் மந்திரி உத்தரவு

கேரளாவில் விடுமுறை நாட்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு முதல் மந்திரி பினராயி விஜயன் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

Update: 2021-08-17 19:23 GMT

திருவனந்தபுரம்,

கேரள சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தியில், கடந்த 24 மணிநேரத்தில் 21,613 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 37,24,030 ஆக அதிகரித்துள்ளது.  1,75,167 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 18,556 பேர் குணமடைந்துள்ளனர்.  இதனால், கேரளாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 35,29,465 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்து உள்ளது.

கொரோனா 2வது அலையின் தீவிரம் கேரளாவில் குறையாமல் அதிகரித்து வரும் சூழலில், முதல் மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டுள்ள உத்தரவில், விடுமுறை நாட்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும்படி கூறியுள்ளார்.

இணை நோய்கள் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கும்படியும் அவர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

மேலும் செய்திகள்