தலீபான்களுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பதிவு: அசாமில் 14 பேர் கைது

தலீபான்களுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பதிவு வெளியிட்டதாக அசாமில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2021-08-21 08:39 GMT
கவுகாத்தி,

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். இதனால், கடந்த சில வாரங்களாக தலீபான்கள் குறித்த பேச்சும், விவாதம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. சமூக வலைத்தளங்களில் தலீபான்கள் குறித்த செய்திக்ளும் கருத்துக்களும் அதிகம் இடம் பெற்று வருகின்றன. 

இந்த நிலையில், அசாமில் தலீபான்களுக்கு ஆதரவு தெரிவித்த சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அசாம் மாநில காவல்துறை டிஜிபி இது பற்றி கூறுகையில், “ சமூக வலைத்தளங்களில் மக்கள் லைக்குகள், பதிவுகள் வெளியிடும் போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்” என்று  தெரிவித்துள்ளார். 

முன்னதாக, தலீபான்கள் அமைப்பு பயங்கரவாத இயக்கமாக கருதப்படுவதால் அந்த அமைப்பு தொடர்புடையவர்களின்  பேஸ்புக் கணக்கு , வாட்ஸ் அப் -களுக்கு பேஸ்புக் தடை விதித்தது நினைவுகூரத்தக்கது.

மேலும் செய்திகள்