டெல்லி, உ.பி.யில் அடுத்த 2 மணிநேரத்திற்கு மழை; இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் அடுத்த 2 மணிநேரத்திற்கு மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Update: 2021-08-23 01:53 GMT


புதுடெல்லி,

வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமுடன் பொழிந்து வருகிறது.  இந்த நிலையில், டெல்லியில் நேற்று முன்தினம் அதிகாலை 2.30 மணி முதல் 5.30 மணி வரை தொடர்ச்சியாக மழை பெய்தது.

டெல்லி சப்தர்ஜங் பகுதியில் 73.2 மி.மீ. அளவுக்கு மழை பதிவாகி உள்ளது.  டெல்லியின் பிரகதி மைதான், லஜ்பத் நகர் மற்றும் ஜங்புரா பகுதிகள், ஐ.டி.ஓ. ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்தது.  இதனால், பல்வேறு சாலைகளில் வெள்ளநீர் தேங்கியது.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாலைகள் மூடப்பட்டன.

இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் அடுத்த 2 மணிநேரத்திற்கு மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

டெல்லியின் சில இடங்களிலும் மற்றும் டெல்லியை சுற்றியுள்ள சில பகுதிகளிலும், உத்தர பிரதேசத்தின் தவுராலா, சப்ரவுலா, பாக்பத், கேக்ரா, அனூப்சாஹர், ஷிகார்பூர், பகசு, தேபை, நரோரா உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மித அளவிலான மழை பெய்யும் என்று தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்