கொரோனா கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த கேரள அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-08-27 16:06 GMT
திருவனந்தபுரம்,

நாடு முழுவதும் கொரோனா பரவல் முதல் அலையை காட்டிலும், 2-வது அலையில் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டனர். இதேபோல அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. கொரோனா பரவல் குறைந்து வருகிறது.

இந்தநிலையில்   கேரளாவில் தொடர்ந்து 3 -வது நாளாக கேரளாவில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தனிமைப்படுத்தலை மீறுவதே கொரோனா அதிகரிப்புக்கு காரணம் என மாநில அரசு குற்றம்சாட்டுகிறது. கேரளாவில் கொரோனா 2-வது அலை கட்டுக்கடங்காமல் உள்ளது.

இந்தநிலையில்  கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக  மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், கேரள மாநில தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில்,

இந்தியாவிலேயே கேரள மாநிலத்தில் தான் கொரோனா மிகவும் உச்சத்தில் உள்ளது. நாட்டில் உள்ள கொரோனா பாதிப்புகளில் கேரளா முதலிடத்தில் உள்ளது கவலைக்குரியது. ஓணம் பண்டிகைக்கு பிறகு சமீபத்திய பாதிப்பு எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்