இங்கிலாந்து நிறுவனத்தின் வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி மனு: ஏர் இந்தியா நடவடிக்கை

சொத்துகளை பறிமுதல் செய்யக்கோரும் இங்கிலாந்து நிறுவனத்தின் வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி ஏர்இந்தியா நிறுவனம் மனுத்தாக்கல் செய்துள்ளது.

Update: 2021-08-29 21:58 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

இங்கிலாந்தை சேர்ந்த கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்துக்கு மத்திய அரசு திருப்பி செலுத்த வேண்டிய 120 கோடி டாலருக்காக ஏர் இந்தியா நிறுவன சொத்துகளை பறிமுதல் செய்வதற்காக அமெரிக்காவின் நியூயார்க் கோர்ட்டில் அந்த நிறுவனம் வழக்கு பதிவு செய்துள்ளது. ஆனால் இந்த நிறுவனத்தின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாஷிங்டன் கோர்ட்டில் மத்திய அரசு வழக்கு தொடுத்து உள்ளது. இந்த வழக்கின் மீதான விசாரண நிலுவையில் உள்ளது.

எனவே இதை சுட்டிக்காட்டி, மேற்படி வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என நியூயார்க் கோர்ட்டில் ஏர்இந்தியா நிறுவனம் மனுத்தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசின் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்தின் இந்த வழக்கு முன்கூட்டியதாக இருப்பதாக ஏர் இந்தியா தனது மனுவில் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்