அரியானாவில் விரைவில் கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் ; முதல்-மந்திரி தகவல்

அரியானாவில் விரைவில் கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

Update: 2021-08-30 11:29 GMT
சண்டிகர்,

அரியானாவில் விரைவில் கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்-மந்திரி கட்டார் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, கட்டாய மதமாற்ற சம்பவங்கள் அரியானாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இது போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் நாம் சட்டத்தை கொண்டுவர வேண்டும். இது தொடர்பாக ஆய்வு நடைபெற்றுள்ளது. 

கட்டாய மதமாற்ற தடை தொடர்பாக வரைவு சட்டம் விரைவில் கொண்டுவரப்படும். இந்த வரைவு சட்டத்தை அவசர சட்டம் மூலம் அமல்படுத்துவதா? அல்லது சட்டசபையில் மசோதாவாக தாக்கல் செய்து அமல்படுத்துவதா? என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்’ என்றார்.

மேலும் செய்திகள்