மேயர் பதவியை பா.ஜனதா கைப்பற்ற குமாரசாமியிடம் ஆதரவு கேட்டுள்ளோம்: பசவராஜ் பொம்மை

கலபுரகி மாநகராட்சியில் மேயர் பதவியை பா.ஜனதா கைப்பற்ற குமாரசாமியிடம் ஆதரவு கேட்டு இருப்பதாக பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

Update: 2021-09-07 19:11 GMT
காங்கிரஸ் வெற்றி
55 வார்டுகளை கொண்ட கலபுரகி மாநகராட்சியில் காங்கிரஸ் 27 இடங்களிலும், பா.ஜனதா 23 வார்டுகளிலும், ஜனதா தளம் (ஏஸ்) 4 இடங்களிலும், ஒரு இடத்தில் சுயேச்சையும் வெற்றி பெற்றுள்ளன. ஜனதா தளம் (எஸ்) கட்சியின் ஆதரவு இல்லாமல் அங்கு தேசிய கட்சிகள் மேயர் பதவியை கைப்பற்ற முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் ஜனதா தளம் (எஸ்) கட்சியின் ஆதரவை பெற இரு கட்சிகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன.

ஜனதாதளம் (எஸ்) ஆதரவு

இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கலபுரகி மாநகராட்சியில் ஜனதா தளம் (ஏஸ்) கட்சியின் ஆதரவை பெறும் நோக்கத்தில், குமாரசாமியுடன் பேசினேன். பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஒன்றாக பணியாற்றுவோம் என்று சொன்னேன். உள்ளூர் நிர்வாகிகளுடன் பேசிவிட்டு முடிவு செய்வதாக குமாரசாமி கூறினார். அக்கட்சி எங்களுடன் சேர்ந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளது. அதனால் கலபுரகியில் பா.ஜனதா மற்றும் ஜனதா தளம் (ஏஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து மேயர் பதவியை கைப்பற்றும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

மேலும் செய்திகள்