ஆந்திர பிரதேசத்தில் லாரியில் கடத்தப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

ஆந்திர பிரதேசத்தில் லாரியில் கடத்தப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Update: 2021-09-11 17:03 GMT

கிழக்கு கோதாவரி,

ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரில் இருந்து உத்தர பிரதேசம் நோக்கி லாரி ஒன்று சென்றுள்ளது.  அதில், போதை பொருள் கடத்தப்படுகிறது என போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.

ராமவரம் கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற அந்த லாரியை ஜக்கம்பேட்டை ஆய்வாளர் சுரேஷ் தலைமையிலான போலீசார் படை தடுத்து நிறுத்தி சோதனையிட்டு உள்ளது.

இதில், 2 ஆயிரம் கிலோ எடை கொண்ட லாரியில் கடத்தப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.  இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுதவிர, 2.31 லட்சம் பணம் மற்றும் 7 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.  இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்