லடாக்கில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2- ஆக பதிவு

லடாக்கில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது.

Update: 2021-09-13 05:28 GMT
லே,

லடாக் யூனியன் பிரதேசத்தில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. லடாக்கின் கார்கில் நகரை மையமாக கொண்டு 5 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இன்று காலை 9.13 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு போன்ற எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்