கேரளாவில் கனமழை: 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

கேரளாவில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதலே கனமழை பெய்து வருகிறது.

Update: 2021-09-27 09:19 GMT
திருவனந்தபுரம், 

கேரளாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு முதலே கனமழை வெளுத்து வங்குகிறது.  கேரளாவில் உள்ள 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  காசர்க்கோடு, கன்னுர், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், திரிசூர், பாலக்காடு, இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா, பத்தினம் திட்டா ஆகிய 11  மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு பச்சை நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   ஆந்திராவில் கரையைக் கடந்த குலாப் புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்